• Jan 15 2026

மாதம்பட்டி ரங்கராஜை அடிச்சு திருத்தப் போகிறாரா ஜாய்.? தெறிக்கவிட்ட இன்ஸ்டா பதிவு

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

கேட்டரிங் சேவையின் மூலம் பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜ், 'மெஹந்தி சர்க்கஸ்' உள்ளிட்ட ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாகக் கூறி, ஜாய் கிரிசில்டா ரங்கராஜ் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இந்த தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக, ஜாய் கிரிசில்டா வெளியிட்ட சமூக வலைதளப் பதிவுகள் மாதம்பட்டி ரங்கராஜின் தந்தைக்குச் சொந்தமான மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்திற்கு பெரும் வர்த்தக பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. 

இதனால் சுமார் ரூ.12 கோடி அளவிற்கு வர்த்தக இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்து, மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் மற்றும் மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை இணைத்து பதிவிட்ட அனைத்து கருத்துக்களையும் நீக்குவதாக ஜாய் கிரிசில்டா தரப்பில் உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கை முடித்து வைத்தார்.


இதற்கிடையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து இரண்டு ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்துவிட்டு, கர்ப்பமாக இருந்த நிலையில் தன்னை விட்டு சென்றுவிட்டதாக ஜாய் கிரிசில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகார் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோக்களையும் பதிவுகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

எனினும், மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா தன்னை மிரட்டி திருமணம் செய்ததாகவும், குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறி அறிக்கை வெளியிட்டார். இதற்கு பதிலளித்த ஜாய் கிரிசில்டா, டிஎன்ஏ டெஸ்டுக்கு தயாராக இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனாலும் ரங்கராஜ் இதுவரையில் டிஎன்ஏ பரிசோதனைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'அடிச்சு ஆடனும்னு முடிவு பண்ணிட்டா அடிக்கணும் நண்பா... அடிச்சா தான் திருந்த வேண்டியவன் திருந்துவான்.. அழிய வேண்டியவன் அழிவான்..' என  அதிரடி ஸ்டோரியை பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், இதுவரை அமைதியாக இருந்த ஜாய் கிரிசில்டா இனிமேல் அருந்ததீ அவதாரம் எடுக்கப்போகிறாரா? ரங்கராஜை அடித்து அடக்கப் போகிறாரா? இந்த விவகாரத்தில் அவருக்கு நீதி கிடைக்குமா?  என சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement