• Jan 15 2026

திவ்யா மீது சாண்ட்ராவுக்கு ஏற்பட்ட கோபத்திற்கு இதுதானா காரணம்? இன்ஸ்டா ஸ்டோரியால் பரபரப்பு

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ன் டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிந்து கொள்ள இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. இருப்பினும், “யாருக்கு வேண்டுமானாலும் டைட்டில் கொடுக்கலாம், ஆனால் அரோராவுக்கு மட்டும் கொடுக்கக் கூடாது” என சில பிக் பாஸ் பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மற்றொரு பக்கம், திவ்யா, விக்ரம் மற்றும் சபரி ஆகிய போட்டியாளர்களுக்கிடையே வாக்கு சேகரிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அதேபோல், பிக் பாஸ் வீட்டிற்கு பழைய போட்டியாளர்கள் கெஸ்ட் ஆக மீண்டும் வருகை தந்துள்ளதும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாண்ட்ராவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகள் தற்போது வைரலாகி வருகின்றன. 

திவ்யா – சாண்ட்ரா இடையே உண்மையில் என்ன பிரச்சனை என்ற குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு, தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.


அதன்படி, சாண்ட்ரா வெளியிட்ட ஸ்டோரியில், பிரஜின்  மற்றும் சாண்ட்ரா பேசாமல் இருந்த நேரத்தில்,  பிரஜின் திவ்யாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் தனியாக அமர்ந்திருந்த சாண்ட்ராவிடம் சென்று பேசுமாறு  திவ்யா பிரஜினுக்கு அறிவுரை கூறவில்லை. அதுதான் அங்கு திவ்யா செய்த தவறு என்றும், அதனால்தான் சாண்ட்ராவுக்கு கோபம் வந்ததாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கணவன் – மனைவி இடையே பிரச்சனைகள் வருவது இயல்பானதே. அதில் மூன்றாம் நபர் தலையிட முடியாது. தலையிடவும் கூடாதும். அதைத்தான் திவ்யா செய்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது, ஒருவர் தனது கணவருக்கு அட்வைஸ் செய்யவில்லை என்பதற்காக சாண்ட்ரா கோபப்படுவது நியாயமல்ல என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், மீண்டும் பிக் பாஸ் வந்த பிரஜின் திவ்யாவை அழைத்து சாண்ட்ராவுடன் என்ன பிரச்சனை என பிரஜின் விசாரித்ததும், திவ்யாவின் தோள்மீது கை போட்டு நடந்ததும் மேலும் இந்த பிரச்சினைக்கு வலுவூட்டியது.

இதைக் கண்ட பிக் பாஸ் ரசிகர்கள், “பொண்டாட்டிக்கு சந்தேகம் இருக்கும்போது, இந்த நேரத்தில் இப்படி நடந்துகொள்வது தேவையா?” என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement