• Jan 15 2026

நச்சுன்னு நாலு கிளாமர் போட்டோஸ் இறக்கிய ஜோவிகா விஜயகுமார்.!

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

நடிகை வனிதா விஜயகுமாரின் மகளும், பிக் பாஸ் தமிழ் சீசன் 7 மூலம் பிரபலமானவருமான ஜோவிகா விஜயகுமார், சினிமா உலகில் பிஸியாக இருந்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, இயக்குநர் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் , பிக் பாஸில் சம்பாதித்த பணத்தை வைத்து ‘மிஸ்டர் அண்ட் மிசர்ஸ்’ என்ற திரைப்படத்தையும் தயாரித்திருந்தார். 

இந்த படத்தில் கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் நடிப்பை அவரது தாயார் வனிதா விஜயகுமார் மேற்கொண்டிருந்தார். ஆனால், இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தோல்வியடைந்தது.


சமீபத்தில் ஜோவிகா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் காட்சிகளும், நடன இயக்குநர் பாபா பாஸ்கர் மாஸ்டர் நடனம் கற்றுக் கொடுக்கும் வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார்.

அதில் “வெடிய போடு” என்ற புரோமோ பாடலில் தான் கேமியோ நடனம் ஆடியுள்ளதாக ஜோவிகா குறிப்பிட்டார். இதன் மூலம், ஜோவிகா சினிமாவில் தனது முதல் அடியை கேமியோ நடனமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஜோவிகா விஜயகுமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement