• Sep 28 2025

குழந்தையின் சாபம் சும்மா விடாது.! இது பழிவாங்கும் எண்ணமா? ஜாய் கிரிஸில்டா ஆவேச பேச்சு

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் பிரபல சமையல் கலைஞராக திகழும்  மாதம்பட்டி ரங்கராஜ்  சமீபத்தில்  ஜாய் கிரிஸில்டா  என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.  இவர் திருமணம் செய்த அடுத்த நாளே  ஜாய் கிரிஸில்டா  ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து திடீரென  மாதம்பட்டி ரங்கராஜ்  தன்னை கைவிட்டதாக   ஜாய் கிரிஸில்டா  பேட்டி கொடுத்தார்.    தொடர்ச்சியாக மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக பல பேட்டிகளை கொடுத்த போதும் அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் எந்தவித  பதிலும் சொல்லாமல் மௌனம் காத்தார். 

இதற்கிடையில்  ஜாய் கிரிஸில்டா  மாதம்பட்டி ரங்கராஜை  மட்டுமில்லாமல் அவர் சார்ந்த  அத்தனை பேரையும்  டேக் பண்ணி  முறைப்பாடு வைத்தார். இதனால்  மாதம்பட்டி ரங்கராஜ்  ஜாய் கிரிஸில்டா  மீது  வழக்குப் பதிவு செய்தார்.  இதன் காரணத்தினால் நேற்று சுமார் 6 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. 

இந்த நிலையில், விசாரணைகளின் பின்  ஜாய் கிரிஸில்டா  செய்தியாளர்களிடம்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.   கடந்த ரெண்டு வருஷமா திருமணம் செய்து கொண்ட நாங்கள், எப்படி எல்லாம் வாழ்ந்தோம் என்பதற்கான  எல்லா விஷயங்களையும்  சொல்ல வேண்டிய காரணத்தினால் விசாரணைக்கு ஆறு மணி நேரம் ஆகிவிட்டது. 


நானும் அவரும் வாழ்ந்ததற்கான மொத்த ஆதாரத்தையும் ஒப்படைத்து இருக்கின்றேன்.  அது என்ன என்பதை சொல்ல முடியாது. ஆனால் விசாரணை நியாயமாக இருக்கும் என்று நம்புகின்றேன். 

யூட்யூப் தளத்தில் என்னைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்கின்றீர்கள். ஆனால் எல்லோருக்கும் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகின்றேன்.  நான் இப்போது கர்ப்பமாக இருக்கின்றேன். இந்த நேரத்தில் என்னைப் பற்றி அவதூறாக பேசினால் இந்த குழந்தையின் சாபம் உங்களை சும்மா விடாது. 

உங்களுடைய வீட்டிலும் பெண்கள் இருப்பார்கள். அவர்களுக்கும் இது போன்ற பாதிப்பு நடந்தால் என்ன செய்வீர்கள்? அதை புரிந்து கொண்டு உண்மை என்னவென்று தெரிந்தால் மட்டுமே எழுதுங்கள். 

பெண்களைப் பற்றி மட்டுமே விமர்சனம் செய்கின்றீர்கள்.  ஆனால் ஏன் ஆணை பற்றி பேச, எழுத முன் வருவதில்லை?  என்னை சுற்றியே பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கின்றீர்கள். அதே கேள்வியை ஏன் அவரிடம் கேட்கவில்லை. 

பாதிக்கப்பட்ட பெண்ணை கேள்வி கேட்டே பழகி உள்ளீர்கள்.  எனக்கு அவரை பழிவாங்கும் எண்ணம் இல்லை.  எனது குழந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன்  என தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement