கன்னட திரைப்படமான காந்தாரா கர்நாடகாவில் மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து இதன் அடுத்த பாகம் தற்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
‘காந்தாரா - சாப்டர் 1’ என்ற படத்தை ரிஷப்ஷெட்டி இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் ருக்மணி வசந்த் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மேலும் காந்தாரா சாப்டர் 1 படம் சுமார் 30 நாடுகளில் வெளியாக உள்ளன.
‘காந்தாரா - சாப்டர் 1’ படத்தின் டிரெய்லர் நேற்றைய தினம் வெளியானது. அதில் பழங்குடியினருக்கும் மன்னருக்குமான நில உரிமை பிரச்சினைகள் அடிப்படை கதைக் களத்தை கொண்டதாக தெரிகின்றது. இந்த படமும் பான் இந்திய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வசூலை பெறலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘காந்தாரா - சாப்டர் 1’ படத்தில் ரிஷப் ஷெட்டிக்கு தமிழ் டப்பிங் செய்துள்ளார் நடிகர் மணிகண்டன். ஏற்கனவே டப்பிங் கலைஞனாகவும் பணியாற்றிய மணிகண்டன் பல நடிகர்களுக்கு குரல் கொடுத்துள்ளார். இந்திய அளவில் உருவாகும் காந்தாராவில் மணிகண்டன் டப்பிங் செய்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் வெளியான ஜெய் பீம் படத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தவர் மணிகண்டன். இவர் நடிப்பதில் மட்டும் இல்லாமல் திரைக்கதை எழுதுவதிலும், டப்பிங் பண்ணுவதிலும் தனது ஆர்வத்தை செலுத்தி வருகின்றார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான குட் நைட், குடும்பஸ்தன், லவ்வர் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!