• Sep 28 2025

மனோஜ் முகத்தில் கரியை பூசிய மீனா.. ரோகிணிக்கு முத்து கொடுத்த ஷாக் ட்ரீட்மென்ட்

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , முத்து தனது நண்பர்களுடன்  சவாரி பற்றியும் காசு சேமித்து  ரூம் கட்ட வேண்டும் என்றும் பேசி கொண்டுள்ளார். அந்த நேரத்தில் அங்கு சத்யா வந்து க்ரிஷ்க்கு கொடுக்குமாறு பேரிச்சம் பழத்தை கொடுக்கின்றார். 

அதன் பின்பு முத்து,  மீனாவுக்கு போன் பண்ணி க்ரிஷ் வீட்டுக்கு வருமாறு சொல்லுகிறார். அங்கு ஏற்கனவே ரோகிணி  க்ரிஷை பார்க்க வருகின்றார்.  வரும்போது அவருக்கு பிடித்த உணவுகளையும் விளையாட்டு பொருட்களையும் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கின்றார். 

அந்த நேரத்தில் முத்துவும் மீனாவும் அங்கு வர,  உடனே ஒளிந்து கொள்கின்றார். முத்து கொடுத்த பேரீச்சம் பழத்தை விரும்பி சாப்பிடுகின்றார்.  மேலும் முத்துவும் க்ரிஷும் விளையாடிக் கொண்டு இருக்க, ரோகிணி அவருடைய அம்மாவுக்கு கண்ணை காட்டுகின்றார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அவருடைய அம்மாவும் கோவிலுக்கு போகணும் நேரம் ஆகிவிட்டது என்று சொல்கின்றார். 

இதை பார்த்த மீனா, முத்துவை  அழைத்துக் கொண்டு செல்லுகின்றார். மேலும் முத்துவிடம் அவங்க எங்களை வெளியே அனுப்புவதிலேயே குறியா இருந்தாங்க.. கவனிச்சீங்களா? என்று கேட்கிறார். 


அதன் பின்பு ரோகிணியின் அம்மா  ரோகிணியிடம் முத்துவும் மீனாவும்  க்ரிஷ் மேல ரொம்ப பாசமா இருக்காங்க .  உண்மை தெரிஞ்சா கூட அவங்க உன்ன பிரச்சினையில் இருந்து காப்பாற்றுவாங்க என்று சொல்ல, அதற்கு ரோகிணி பேசுகிறார்.

இறுதியில்  மீனா  வைபவங்களுக்கு  பூக்களை பரிசாக கொடுக்கும் போது அது ஒரு நாளிலேயே குப்பைக்கு சென்று விடுகின்றது. இதனால் அதற்கு மாற்று வழியாக  பூக்களால் ஆன பழக் கூடை ஒன்றை செய்து  முத்துவுக்கு காட்ட, அவர் வீட்டாருக்கு காட்டுகின்றார். 

ஆனாலும் மனோஜ் இது எல்லாம் ஏற்கனவே வந்தது என கிண்டல் செய்கின்றார் .  அந்த நேரத்தில் ஸ்ருதி, ரவி ஆகியோர் மீனாவை  பாராட்டுகின்றார்கள்.  மேலும் அண்ணாமலையும் ஆசீர்வாதம் பண்ணுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement