• Dec 04 2023

ஜல்லிக்கட்டு புகழை தட்டித் தூக்கிய பிக்பாஸ் டீம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7இல் இந்த வாரம் வெளியேறியது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 7ல் மாயா, ஐஷு, அர்ஜே பிராவோ, மணி, அக்‌ஷயா, அன்ன பாரதி, கானா பாலா,தினேஷ் மற்றும் அர்ச்சனா உள்ளிட்டோர் நாமினேஷனில் சிக்கினர். இதில் பலரும் புதிதாக வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்தவர்கள் தான்.


இந்த நிலையில், ஜல்லிக்கட்டில் களத்தில் நின்று வர்ணனை செய்த பெண் என கம்பிரமாக கருதப்பட்ட அன்ன பாரதி தான் இந்த வாரம் வெளியேறியுள்ளார். ஒரே வாரத்தில் வைல்ட் கார்டாக வந்த அன்னபாரதியை வெளியேற்றி இருப்பது பலருக்கு அதிர்ச்சியாக காணப்படுகிறது. 

இதேவேளை, இந்த வார நிகழ்ச்சியில் கமல் டுவிஸ்ட் ஏதும்  கொடுப்பாரா இல்லையா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement