• Jan 18 2025

பிக்பாஸ் வீட்டில் ரகசியத்தை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள்! சற்றுமுன் வெளியான க்ளிம்ப்ஸ் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வரலாற்றில் இம்முறை  மேலும் ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிது. எனினும் அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் விசித்ரா, தினேஷ், பிரதீப் ஆகிய மூவரும் பேசிக் கொண்டிருந்த சம்பவ க்ளிம்ப்ஸ் ஒன்று இணையத்தில் வைரலானது.


அதில் பிரதீப் 'விஷ்ணு வெளியில் ஆள் செட் பண்ணி வைத்து விளையாடுர போல இருக்கு. இங்க வந்தா 50 லட்சம் கிடைக்கும். அதில் ஒரு 10 லட்சத்தை செலவு பண்ணி ஆள்கள தயார் பண்ணி வைச்சு இருப்பான் போல. அவங்கள வச்சு தான் அவனுக்கேற்ற மீம்ஸ், வீடியோக்கள தயார் செய்து போடச் சொல்லியிருப்பான் போல இருக்கு' என பிரதீப் கூற..

 
இடையில் பேசிய விசித்ரா 'ஆமா.. ஆமா.. அர்ச்சனா உள்ள வந்ததும் அததான் சொன்னா. விஷ்ணுவ பற்றி நிறைய போஸ்டர்கள் தினமும் ட்ரெண்ட் ஆகி வருவதா சொன்ன' என சொல்ல...

இதில் தினேஷ் ' நான் பிக்பாக்கு போகப்போறன் என்டு தெரிஞ்ச சில கும்பல் என்னட்டையும் வந்து பணம் கேட்டாங்க..நாங்க ஓட்டுப் போட்டு உங்கள ஜெயிக்க வைக்கிறோம்னு சொன்னாங்க' என தினேஷ் கூறினார்.


இறுதியில் அந்த வீடியோவில் பிரதீப் 'என்னத்த பணம் கொடுத்தாலும் நாம் எப்படி விளையாடுகிறோம்னு மக்கள் பார்ப்பாங்க. இப்போ நான் நல்லா விளையாடினா விஷ்ணு ஒட்டுவோடு சேர்ந்து என் ஓட்டு எனக்கு வந்து சேரத்தான் செய்யும்' என கூறினார்.

இவ்வாறு இவர்கள் குடியிருந்து பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

Advertisement

Advertisement