• Oct 13 2024

அஜித்துக்கு வில்லனாக மாறும் நடிகர்! ‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த மாஸ்டர் வில்லன்...

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு தனது 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் இந்த படமானது 2024 டிசம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதற்கிடையில் நடிகர் அஜித் தனது 63வது திரைப்படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். 


அதன்படி மார்க் ஆண்டனி படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான போதே படமானது 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


அதன் பின்னர் படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு ஐதராபாத் போன்ற பகுதிகளில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.'குட் பேட் அக்லி' படத்தில் அஜித்துக்கு வில்லனாக முக்கிய நடிகர் இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் நடிகை திரிஷா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, நஸ்லேன் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸ் கமிட் ஆகியுள்ளாராம். மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.


Advertisement