ஹாலிவுட் திரையுலகின் பிரபலமான நட்சத்திரங்கள் ஒரே நேரத்தில் கலிப்போர்னியாவில் சந்தித்தனர். ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் இந்திய சினிமா ஸ்டார் ஹிருத்திக் ரோஷனை கலிப்போர்னியாவில் சந்தித்தார். மேலும், இந்த சந்திப்பின் புகைப்படங்களை ஹிருத்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் வெளியானதும் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி, ரசிகர்கள் மனதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிருத்திக் ரோஷனின் இன்ஸ்டா பக்கத்தில், ஜாக்கியுடன் எடுத்த புகைப்படங்களில் இருவரும் சந்தோஷமாக சிரிப்பதை ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர்.
இரு நட்சத்திரங்களும் இதற்கு முன்பும் பலமுறை சந்தித்துள்ளனர். குறிப்பாக சீனாவில் நடந்த “காப் பிரீமியர் 2019” நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்து புகைப்படங்கள் எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சமீபத்திய கலிபோர்னியா சந்திப்பு, ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களின் நட்பை மீண்டும் வெளிப்படுத்தியது. ஹிருத்திக் ரோஷன், இந்திய திரையுலகில் தனது நடிப்பு திறமையால் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர். ஜாக்கி சான், ஹாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் என்ற நிலையில், இவர்களது சந்திப்பு சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!