கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 9இல் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா மற்றும் இறுதியாக ஆதிரை வெளியேற, 16 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக காணப்படுகின்றனர்.
இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டில் பிரவீன் ராஜ் கேப்டன் ஆகியுள்ளார். அவர் கேப்டன் ஆனதும் பிக் பாஸ் வீட்டில் அவர் போட்டுள்ள ரூல்ஸ் சக போட்டியாளர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, ரூல்ஸ் நம்பர் ஒன், எனக்கு இந்த வீட்டில் டிசிப்ளின் ரொம்ப முக்கியம். அதனால இந்த வீட்டில் இருக்கிறவங்க கண்டிப்பாக ரூல்ஸ் ஃபாலோ பண்ண வேண்டும்.

ரூல்ஸ் நம்பர் டூ.. ரூல்ஸ் நம்பர் ஒன்னை ஃபாலோ பண்ண வேண்டும் என ரொம்ப ஸ்டிக்கா பிரவீன் கூறியுள்ளார். மேலும் டீம் பிரிக்கும் போது அவமானம் என்று ஒருவர் இருப்பார், ரூல்ஸ் பிரேக் பண்ணுறவங்க அந்த இடத்தில் நிற்கும் போது சில சலுகைகள் ரத்து செய்யப்படும் என கூறியுள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் இரண்டு பேருக்கு இடையில் சண்டை நடந்தால் நான் அதனை பேசி தீர்த்து வைப்பேன். ஆனால் அதனையும் மீறி சண்டை போட்டால் அவர்கள் ஒதுக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
இதனை கேட்ட கம்ருதினும் பார்வதியும் ஒதுக்கி வைப்பது என்றால் என்ன? சாப்பாடு தர மாட்டீங்களா என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, எல்லாத்தையும் இப்போவே சொல்ல முடியாது என அவர்களின் மூக்குடைத்துள்ளார் பிரவீன்.
Listen News!