• Jan 19 2025

அவனுக்கு அவ்வளவு தான் அறிவு, திட்டினால் திட்டிட்டு போறான்- விஜயகாந்த பற்றிய தகவலை ஓபனாகப் பேசிய பிரபல நடிகர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வந்த விஜயகாந்த் அரசியலில் நுழைந்த பிறகு சினிமாவில் இருந்து விலகினார். அரசியலிலும் சினிமாவிலும் மக்கள் நெஞ்சில் நீங்கா இடத்தை பிடித்த விஜயகாந்தை பிடிக்காதவர்களே யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு அவர் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தார்.

அவர் மறைந்து இரண்டு வாரத்திற்கு மேலானபோதும் அவரின் நினைவிடத்தில் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வடிவேலுவுக்கும் விஜயகாந்திற்கும் இடையில் பெரிய பிரச்சினை இருக்கின்றது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.


இந்நிலையில் வடிவேலுவுக்கும் விஜயகாந்த்துக்கும் பிரச்னை உச்சத்தில் இருந்த சமயத்தில் நடந்த விஷயம் குறித்து நடிகர் இளவரசு பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "எங்கள் ஆசான் படத்தில் விஜயகாந்த்துடன் நடித்தேன். அப்போது அவரிடம் அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அதற்கு அவர், 'ஐயோ முடியவே இல்ல. ஒருத்தனும் சொன்ன பேச்ச கேட்க மாட்டேங்குறான்.


 சட்டப்பேரவையில் நடப்பதெல்லாம் பார்த்தால் கடுப்பா இருக்கு. நாம ஒன்னு சொன்னா வெளியே ஒன்னு போடுறானுங்க. ஒரே டார்ச்சர். இரவில் வடிவேலுவின் காமெடியை பார்த்து சிரித்துவிட்டுத்தான் தூங்கவே போகிறேன் என சொன்னார். உடனே நான் அவரது முகத்தை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தேன். அதை புரிந்துகொண்ட விஜயகாந்த், 'அவன் திட்டுனா திட்டிட்டுப்போறான் இளவரசு. அவனுக்கு அவ்ளோதான் அறிவு' என சொன்னதாக இளவரசு அந்தப் பேட்டியில் கூறினார்.


Advertisement

Advertisement