• Oct 25 2025

அது தான் என்னுடைய கேரியரில் பெரிய படமாக அமையும்.! தனுஷ் படம் பற்றி மாரி ஓபன் டாக்

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  தவிர்க்க முடியாத இயக்குநராக  மாரி செல்வராஜ் உருவெடுத்துவிட்டார். இவர் தான் சந்தித்த மனிதர்கள், தன்னை பாதித்த சம்பவங்களை படமாக இயக்கி வெற்றி பெற்று வருகின்றார். 

அந்த வகையில் தற்போது  கபடி வீரர் மணத்தி கணேசனுடைய வாழ்க்கையை மையமாகக் கொண்டு பைசன் படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் ரீதியாகவும்  லாபத்தை சம்பாதித்துள்ளது. 

இந்த நிலையில்,  பைசன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து  மாரி செல்வராஜ் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில், என்னுடைய 5 படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதற்கு காரணம் மக்கள் கொடுத்த ஆதரவு தான்.  அதற்கு மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். 


எனது அடுத்த படத்தை தனுசுடன்  இணைந்து எடுக்க உள்ளேன். அந்தப் படம் பெரிய பட்ஜெட்டில், பெரிய ப்ராசஸில் எடுக்கப்பட உள்ளது.  நிச்சயமா அதற்கு அடுத்த வருடம் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணுவேன். இது என்னுடைய கேரியரில்  பெரிய படமாக அமையும் என்றார்.  


Advertisement

Advertisement