• Apr 02 2025

தளபதி விஜய் செய்த தரமான செயல்.. நடிகர் சங்க கட்டிடத்திற்கு இனி விமோசனம் தான்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் செய்த தரமான செயல் காரணமாக நீண்ட காலமாக முடங்கி இருந்த நடிகர் சங்க கட்டிடத்தின் பணி மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணி தொடங்கிய நிலையில் இந்த கட்டிடத்தின் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது. ஆனால் இந்த கட்டிடத்தை முழுமையாக முடிக்க 30 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் அந்த பணத்தை நடிகர் சங்க நிர்வாகிகள் திரட்டி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் தமிழ் சினிமாவில் உள்ள பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகளிடம் இருந்து தலா ஒரு கோடி ரூபாய் கடனாக வாங்குவது என்றும் அதை வைத்து நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்துவிட்டு அதன் பின் அதில் கிடைக்கும் வருமானத்தில் இருந்து நடிகர் நடிகைகளிடம் இருந்து வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்து விட நடிகர் சங்கம் திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த திட்டத்திற்கு ஆதரவு அளித்து முதல் நபராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் வழங்கிய நிலையில் அடுத்ததாக கமல்ஹாசன் ஒரு கோடி ரூபாய் வழங்கினார். இந்த நிலையில் நேற்று தளபதி விஜய் தனது சார்பில் நடிகர் சங்க நிர்வாகிகளிடம் ஒரு கோடி ரூபாய் வழங்கி உள்ளார் என்பதை நடிகர் சங்கம் உறுதி செய்துள்ளது. மேலும் விஜய்க்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ரஜினிகாந்த், அஜித் உட்பட சில நடிகர்களும் நயன்தாரா, த்ரிஷா உட்பட சில நடிகைகள் நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விமோசனம் வந்து விட்டதாகவே நடிகர் சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement