• Mar 31 2025

முதலமைச்சருடன் நடந்த சந்திப்பு இதுக்குத்தானா? கடலோரத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் விஜய்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை நடிகர் விஜய் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் இது ஒரு மரியாதை நிமித்தமாக சந்திப்பு என்றுதான் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி புதுவை கடலோரத்தில் விஜய் ஒரு மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்கம் கட்ட இருப்பதாகவும் அதற்காக தான் இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.

விஜய் ஒவ்வொரு படத்திற்கும் கோடிக்கணக்கான சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் புத்திசாலித்தனமாக பல்வேறு முதலீடுகளை செய்து வருகிறார். திருமண மண்டபங்கள் மற்றும் ஐடி நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் விஜய், லண்டனிலும் தனது மாமனாருடன் இணைந்து பார்ட்னர் ஆக பல்வேறு பிசினஸ் செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் தான் நீண்ட நாட்களாக விஜய்க்கு ஒரு ஆடம்பரமான மல்டிபிளக்ஸ் தியேட்டர் கட்ட வேண்டும் என்ற கனவு இருந்ததாகவும், அந்த கனவை நனவாக்கும் வகையில் தமிழகத்தில் அவர் முயற்சி செய்த போது அது தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து தான் புதுவையில் பீச் ஓரத்தில் ஒரு மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் தியேட்டர் கட்ட விஜய் முடிவு செய்ததாகவும் இதற்காகத்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்து தன்னுடைய மல்டிபிளக்ஸ் தியேட்டருக்கு இடம் ஒதுக்கி தருமாறு கோரிக்கை விடுத்ததாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து புதுவை அரசு விஜய்க்கு 99 வருட குத்தகைக்கு பீச் ஓரத்தில் ஒரு இடத்தை ஒதுக்கி தர ஒப்புக் கொண்டு இருப்பதாகவும் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவிலேயே அதிநவீன மல்டிபிளக்ஸ் திரையரங்காக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement