• Mar 28 2025

ஒரே படத்தில் 6 ஹீரோயின்களை இறக்கும் சிரஞ்சீவி.. அப்ப த்ரிஷா ஊறுகாய் மாதிரி தானா?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும்விஸ்வாம்பராஎன்ற படத்தின் நாயகியாக த்ரிஷா நடித்து வருகிறார் என்பதும் அது மட்டும் இன்றி அவர் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் அளவுக்கு அவருடைய கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது.

ஆனால் தற்போது வந்திருக்கும் தகவலை பார்க்கும்போது இந்த படத்தில் மொத்தம் ஆறு நாயகிகள் நடிப்பதாகவும், த்ரிஷா இரட்டை வேடத்தில் நடித்தாலும் அவருக்கு டம்மியான கேரக்டர் தான் என்றும் இந்த படம் முழுவதும் கிளுகிளுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சிரஞ்சீவியே 6 நாயகிகளை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது

இஷா சாவ்லா, சுரபி, ஆஷிகா ரங்கநாத் , ஆகிய மூன்று நாயகிகளுக்கு சின்ன சின்ன கேரக்டர்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாககோட்பட நாயகி மீனாட்சி சவுத்ரி மற்றும்சீதாராமம்நாயகி மிருணாள் தாக்கூர் ஆகிய இருவருக்கும் முக்கிய வேடங்கள் கொடுத்திருப்பதாகவும் தெரிகிறது.



இந்த நடிகைகளை முழுக்க முழுக்க சிரஞ்சீவி தனது பரிந்துரையின் பெயரில் தேர்வு செய்ததாகவும் இதை எல்லாம் மீறி தான் த்ரிஷாவின் இரண்டு கேரக்டர் இந்த படத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

படக்குழுவின் முக்கியமான நபர் ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது த்ரிஷாவுக்கு இந்த படத்தில் ஒரு இரட்டை வேடமாக இருந்தாலும் ஊறுகாய் போன்ற சிறிய வேடம் தான் என்றும் மிருணாள் தாகூர் மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகிய இருவருக்கும் தான் படத்தில் வெயிட்டான கேரக்டர் என்றும் கூறியுள்ளனர்.

நீண்ட இடைவேளைக்கு பின் சிரஞ்சீவியுடன், அதுவும் இரட்டை வேடத்தில் நடிக்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் இந்த த்ரிஷாவுக்கு இந்த தகவல் பெறும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் தனக்கு கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்து மற்ற நடிகைகளை விட தன்னுடைய நடிப்பு சிறந்தது என ரசிகர்கள் மனதில் பதியும் வகையில் இருக்க வேண்டும் என்று இந்த படத்தில் அவர் முழு ஈடுபாட்டுடன் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement