• Feb 23 2025

அக்கா செஞ்ச தப்ப நான் செய்ய மாட்டேன்.. தலைவருக்கு வேற லெவல் கேரக்டர் வைத்திருக்கும் செளந்தர்யா ரஜினிகாந்த்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த ’லால் சலாம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்து வெற்றியை பெறாத நிலையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சகோதரி சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சௌந்தர்யா தனது நெருக்கமான வட்டாரத்தில் ’அக்கா செய்த தப்பை நான் செய்ய மாட்டேன்’ என்றும் ’அப்பாவுக்கு வேற லெவலில் ஒரு கேரக்டர் வைத்திருக்கிறேன்’ என்றும் கூறியிருப்பதாக தெரிகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’லால் சலாம்’ திரைப்படம் ஊடகங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் மத்தியில் அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடும் வருத்தத்தில் இருப்பதாகவும் மீண்டும் ஒரு வெற்றி படம் கொடுத்து ஆக வேண்டும் என்பதற்காக அடுத்த படத்திற்கான பணியை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 



இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஏற்கனவே ஐஸ்வர்யா படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்து தனது பெயரை கெடுத்து கொண்ட நிலையில் மீண்டும் மகள் படத்தில் நடிக்க வேண்டுமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது ரசிகர்களுக்கு ஆதரவாக சௌந்தர்யா ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

‘அக்கா செய்த தப்பை நான் செய்ய மாட்டேன், அப்பாவுக்கு ஒரு ஆக்ரோஷமான வில்லன் வேடம் தான் வைத்திருக்கிறேன், அப்பா இதுவரை வில்லனாக மற்றும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆகியுள்ளது, எனவே அவருக்கு ஒரு மாஸ் வில்லன் கேரக்டர் தயார் செய்து வைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.

எனவே ரஜினியை வித்தியாசமான வில்லனாக காட்டும் முயற்சியில் இருக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த் எண்ணம் நிறைவேறுமா? இந்த படம் ஹிட் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement