• Sep 09 2024

சிம்ரனுக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்ததா தயாரிப்பாளர் சங்கம்? என்ன காரணம்?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை சிம்ரனுக்கு தயாரிப்பாளர் சங்கம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததாக பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் நடிகை சிம்ரன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானதாகவும், அவர்கள் இருவருக்கும் சம்பளம் பேசி அட்வான்ஸ் பணமும் கொடுக்கப்பட்டதாம். ஆனால் இருவரும் படப்பிடிப்புக்கு வராமல் வேறு ஒரு படத்தில் கமிட்டாகி  கால தாமதம் செய்து கொண்டு இருந்தனர்.

இதனை அடுத்து அதிரடியாக தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் கூடி இருவருக்கும் ரெட்கார்ட் விதிதத்தோடு தலா ஐந்து லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும், அபராதம் செலுத்தினால் மட்டுமே தெலுங்கு படங்களில் நடிக்க முடியும் என்றும் நிபந்தனை விதித்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து வேறு வழி இன்றி தயாரிப்பாளர் சங்கத்திடம் பிரகாஷ்ராஜ் மற்றும் சிம்ரன் ஆகிய இருவரும் ஐந்து லட்ச ரூபாய் அபராதம் செலுத்தியதாகவும், அதற்கு பின்னர் தான் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவலை சமீபத்தில் அசோக் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறிய பிரபலம் ஒருவர், அதேபோல் தமிழ் திரை உலகிலும் தயாரிப்பாளர் சங்கம் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் படப்பிடிப்புக்கு அல்லது ப்ரோமசனுக்கு வராத நடிகர் நடிகையருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கம் விஷாலுக்கு தடை விதித்த பரபரப்பு இன்னும் நீங்காத நிலையில் இன்னும் சிலருக்கும் தடை விதிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement