• Apr 12 2025

ஒரு பாடலுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி திரையுலகை மிரளவைத்த தமன்னா..!

subiththira / 12 hours ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் முன்னணி நடிகை மற்றும் பிரபலமான நடனக் கலைஞரான தமன்னா, மீண்டும் ஒரு முறை தனது நடனத் திறமையால் ரசிகர்களை மயக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் அரண்மனை 4 படத்தின் வெற்றிக்குப் பிறகு தமன்னா தனது நடிப்பில் மட்டுமில்லாமல் நடனத்திலும் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியிருந்தார்.


ஜெயிலர் படத்தில் வெளியான 'காவாலயா...' பாடலுக்காக அவர் ஆடிய நடனம் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டது. அதில் அவர் ஆடிய நடனம், சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டது. இதனைத்  தொடர்ந்து, தற்போது அவர் பாலிவுட்டில் உருவாகியுள்ள 'ரெய்டு 2' திரைப்படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான அஜய் தேவ்கன், வாணி கபூர், ரித்தேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் அரசியல் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வருகின்றது.


இந்தப் படத்தில் இடம்பெறும் 'நாஷா..' எனும் ஹாட்டான பாடல் தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த பாடலில் தமன்னா தனது ஸ்டைலான நடனத்தை ஆடி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். 

'நாஷா' பாடலுக்காக தமன்னாவிற்கு ரூ.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு பாடலுக்காக, இவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டிருக்கின்றது என்பது தமன்னாவின் மார்க்கெட் மதிப்பு மற்றும் அவரின் நடனத் திறமை என்பவற்றைப் பாராட்டும் விதமாக பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement