• Apr 12 2025

வயதெல்லாம் சும்மா பேச்சுக்குத்தான் போலயே..! சல்மான்கானின் செயலால் வியந்த திரையுலகம்!

subiththira / 12 hours ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் சல்மான் கான் தற்பொழுது செய்த செயல் ஒன்றின் மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளார். சமீபத்தில் அவரின் வீடியோ ஒன்று இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த வீடியோவில், சல்மான் கான் ஒரு மரத்தின் மீது வேகமாக ஏறிய காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோவின் பின்னணியில், சிலர் சல்மான் கானின் வயது மற்றும் உடல் நிலை குறித்து சந்தேகங்களை எழுப்பினர். குறிப்பாக, அவருடைய உடற்பயிற்சி நிலை குறைந்து விட்டதாகவும் வயதாகியதால் அவரது இயல்பான செயல்களை செய்ய முடியாதுள்ளது போன்ற கருத்துக்கள் எழுந்தன.


இந்த நிலையில் சல்மான் கான், “வயதும் உடலும் எனக்குத் தடையாக இருக்காது. நான் இப்போது 58வது வயதில் இருக்கின்றேன். ஆனாலும், நான் 40 வயது மாதிரி சுறுசுறுப்பாக இருகின்றேன் என்றதுடன் உடல்நலக் குறைவு மற்றும் பாதிப்புக்கள் என்பன ஏற்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களுக்கு சல்மான் கான் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவரது கருத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் மூலம், வயது வித்தியாசம் இன்றி கனவுகளையும், கடின உழைப்பையும் பின்பற்றினால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதை சல்மான் கான் நிரூபித்துள்ளார்.

Advertisement

Advertisement