தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ், சமீபத்தில் ஊடகவியலாளர்களுடன் கலகலப்பாக உரையாடியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில் ஹாரிஸ் ஜெயராஜ் தனது இசைப் பயணத்தையும், வாழ்க்கை பற்றிய தத்துவத்தையும் சிறப்பாகப் பகிர்ந்துள்ளார்.
இந்த சந்திப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் கூறிய கருத்துக்கள் ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அதன்போது அவர் கூறியதாவது, "வாழ்க்கை என்பது ஒரு சுவாரஸ்யமான பரிசு. நம்முடைய வேலை என்னவோ அதனை நேர்த்தியாக செய்து கொண்டால் அதற்கான பலன்கள் தானாகவே நம்மை தேடி வரும்." என்று கூறியிருந்தார்.
சமீபத்தில் பழைய பாடல்களை ரீமேக்ஸ் செய்து வெளியிடுவது குறித்து கேள்வி எழுந்த போது, ஹாரிஸ் ஜெயராஜ் தனது கருத்தை சிறப்பாகப் பகிர்ந்திருந்தார். மேலும் "ஏற்கனவே பிரபலமான பாடலை எடுத்துக் கொண்டு அதை மீண்டும் பாடுவது மிகவும் சிறந்த விடயம். ஏனெனில் அந்த பாடலுக்கு ஏற்கனவே ஒரு பெரிய ரசிகர்கள் இருந்திருப்பார்கள். மீண்டும் பாடும் பொழுது அந்த ரசிகர்களின் கூட்டம் இன்னும் அதிகரித்துக் கொள்ளும்" என்றார்.
அத்துடன் "அண்ணன பாத்தியா அப்பாட்ட கேட்டியா.." என்ற தாய்லாந்துப் பாடலின் ரசனையை மதிப்பீடு செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார். தாய்லாந்து போன்ற இடங்களில் உருவான பாடல்களின் இசை உலகம் முழுவதும் பரவுகின்றது என்றதுடன் எந்த மொழி இசையையும் நாம் வரவேற்க வேண்டும் எனவும் ஹாரிஸ் ஜெயராஜ் வலியுறுத்தியுள்ளார்.
Listen News!