• Jan 18 2025

காவலையா தமன்னாவுக்கு மவுசு எகிறிடுச்சு போலயே...! ஜெட் வேகத்தில் உயர்ந்த சம்பளம்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்து பிரபலம் ஆனவர் தான் நடிகை தமன்னா. இவர் இதுவரையில் கிட்டத்தட்ட 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

சுந்தர்.சி இயக்கி நடித்த அரண்மணை 4வது பாகத்தில் நடிகை தமன்னா, ராசிகன்னா ஆகியோர் நடித்து இருந்தார்கள். இந்த படம் கிட்டத்தட்ட 70 கோடிகளை தாண்டி வசூலித்து இருந்தது. அதிலும் தமன்னா ஆடிய அச்சோ அச்சோ பாடல் மிகவும் பாப்புலர் ஆகிவிட்டது.


இந்த நிலையில், தமன்னா ரஜினியுடன் நடித்த ஜெயிலர் படத்திற்கு பிறகு தனது சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். அந்த படத்தில் அவர் ஆடிய காவலையா.. பாடல் பட்டித்தொட்டி எங்கும் பேசப்பட்டது. பொம்மை யானை கூட க்யூட்டாக ஆடிய வீடியோ படு வைரல் ஆனது.


அதன்படி தனது சம்பளத்தை 30 வீதமாக உயரத்திய தமன்னா, அரண்மணை படத்திற்கு 4.5 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கு முதல் நடித்த ஜெயிலர் படத்தில் 3 கோடி பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது தனது சம்பளத்தை 33.33% உயர்த்தி உள்ளதால் தமன்னாவின் சம்பளம் 5 கோடிக்கும் அதிகமாக இருக்கும். ஆனாலும் இது தொடர்பில் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.


 

Advertisement

Advertisement