• Jan 19 2025

சிவகார்த்திகேயனை விஜய் வளரவே விட மாட்டார்..? பிரபலம் தூக்கிப் போட்ட வெடிகுண்டு..

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கோட் திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன் 60 வீதமான டப்பிங் பணிகள் முடிவு பெற்று விட்டதாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர்.

இந்த படத்தில், பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல், சினேகா, லைலா, மைக் மோகன் என பிரபல பட்டாளமே நடித்து வருகின்றது. மேலும் யுவன் சங்கர் ராஜா இதற்கு இசை அமைத்து உள்ளார்.

இந்த நிலையில், பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பிஸ்மி, கோட் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பது தொடர்பில் பேசியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில், 

கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்பதை நான் முதலில் நம்ப இல்லை. ஆனால் இது தான் உண்மை. விஜய் அரசியலுக்கு போனதும் அடுத்த தளபதி யார் என்று இணையத்தில் பேசப்பட்டது. அதில் எஸ்கேயின் படைகள் தாறுமாறாக பதிவிட்டார்கள்.


இப்படியான நிலையில், கோட் படத்தில் சிவகார்த்திகேயன் எப்படி வந்தார் என்பது தான் எனது கேள்வி. ஒருவேளை எஸ்கேயின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்குவதால், அவர் விஜய்யிடம் பேசி இருக்கலாம்.


ஆனால் கோட் படத்தில் எஸ்கே நடிப்பதால் எந்த நன்மையும் கிடைக்கப்போவது இல்லை. ரசிகர்கள் விஜய்யின் முகத்திற்காக தான் படம் பார்க்க வருவார்கள். ஆனால் விஜய், இந்த படத்தில் எஸ்கேயை நடிக்க வைப்பதன் மூலம், அவரின் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து 2026 தேர்தலில் வாக்குகளை அதிகரிக்கலாம் என்று கணக்கு போட்டு இருப்பார். மற்றபடி அவர் சிவகார்த்திகேயனை வளரவிட மாட்டார். 

மேலும் இந்த படத்தில் எஸ்கேக்கு பெரிய கேரக்டர் இருக்காது. சின்ன ரோலில் தான் நடித்து விட்டு போவார் என மேலும் தெரிவித்து உள்ளார் பிஸ்மி. 

Advertisement

Advertisement