• Feb 23 2025

வாடிவாசல் படத்திலிருந்து திடீரென வெளியேறிய சூர்யா..! புதிய ஹீரோ தனுஷ்? வெற்றிமாறனின் முடிவு என்ன?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

வாடிவாசல் திரைப்படம் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம். 

இது கிராமத்து கதை, ஏறுதழுவுதல் என சூர்யாவிற்கு வேறு ஒரு பரிணாமத்தில் காட்டப்போகும் வாடிவாசல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பு காணப்பட்டது.

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் வாடிவாசல் படம் உருவாக போகிறது என சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. 

ஆனால் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருப்பதால் இந்த படம் நடக்குமா? நடக்காதா? என்ற கேள்விகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.


அதற்கு காரணம் இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையில் நடைபெற்ற தகராறு இப்போது மிகப்பெரிய பூகம்பமாக வெடித்தது தான்.

அந்த வகையில், அமீர் நடிக்கிறார் என்பதால் சூர்யா வாடிவாசல் படத்திலிருந்து விலகுகிறார் என்பது போன்ற வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவியது. 

ஆனால் இது குறித்து வெற்றிமாறன் தரப்பிலிருந்தோ நடிகர் சூர்யா தரப்பிலிருந்தோ எந்த ஒரு விளக்கமும் வரவில்லை.


இந்த நிலையில், வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருந்த  சூர்யாவுக்கு பதிலாக மற்றும் ஒரு ஹீரோ நடிக்க இருப்பதாக ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி, சூர்யா தற்போது தன்னுடைய மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் இருந்து வருவதாகவும், இனிமேல் அவரால் அதில் நடிக்க முடியாது என்றும் தகவல் கூறப்படுகிறது.

அத்துடன், சூர்யாவிற்கு பதிலாக ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் தயாராக இருக்கிறாராம்.

ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளி வரவில்லை, சினிமா திரை வட்டாரத்தில் இப்படி ஒரு பேச்சு எழுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement