தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது, தனது அரசியல் பயணத்தை அதிரடியாக ஆரம்பித்துள்ளார்.
கடந்த ஓராண்டாகவே களப்பணியில் கவனம் செலுத்தி வந்த விஜய், அதற்காக மக்களை நேரில் சந்தித்து நிவாரணங்களையும், இளம் மாணவர்களை சந்தித்து கல்விக்கு ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளையும் செய்து வந்தார்.
நடிகர் விஜய் அரசியலில் வருவது உறுதியாக, அவரும் அவ்வாறே தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்தார்.
எனினும் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல், 2026 ஆம் ஆண்டு நடக்கவுள்ள,சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுவோம் என்று விஜய் கூறியுள்ளார்.
தற்போது அவர் நடித்து வரும் கோட் திரைப்படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி 69 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். அதுதான் விஜயின் கடைசி படம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது வெளியான தகவல்களின் படி, அவர் அரசியலில் ஈடுபட்டாலும் இன்னும் இரண்டு படங்களில் அவரது நடிப்பை நிச்சயமாக பார்க்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, கைதி 2 மற்றும் லியோ 2 படத்தில் கேமியோ ரோலில் நிச்சயம் விஜய் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்த தகவல் விஜய்யின் ரசிகர்களை மிகந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!