• Apr 23 2026

நீங்க மட்டும் தான் என்னை இயக்கனுமா? தனுஷ் இயக்கும் படத்தில் செல்வராகவன்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

செல்வராகவன் இயக்கத்தில் உருவான சில படங்களில் தனுஷ் நடித்த நிலையில் தற்போது தனுஷ் இயக்கிய  திரைப்படத்தில் செல்வராகவன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் உருவான ’காதல் கொண்டேன்’ ’புதுக்கோட்டை’ ’நானே வருவேன்’ உள்ளிட்ட படங்களில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த நிலையில் தனுஷ் இயக்கி உள்ள ’D50’ திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் செல்வராகவன் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

முதலில் செல்வராகவன் இந்த படத்தில் நடிக்க தயங்கியதாகவும் அதன் பிறகு தனுஷ் அவருடைய கேரக்டரை விளக்கி கூறிய போது சில மாற்றங்கள் செல்வராகவன் செய்ததாகவும் அதன் பிறகு நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே முதல் முதலாக தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன் நடித்திருக்கிறார் என்ற தகவல் கோலிவுட் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.



இந்த படத்தில் ஏற்கனவே தனுஷ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில் அவருடன் நித்யா மேனன், எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராமன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் செல்வராகவன் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement