• Jan 19 2025

திருட்டுப்பயலே படத்தை இயக்கிய இயக்குநர் வீட்டில் ஏற்பட்ட திடீர் சோகம்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் '5 ஸ்டார் என்ற படத்தின் மூலம் இயக்குநரா அறிமுகமாகியவர் தான் இயக்குநர் சுசி கணேசன். இப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததைத் தொடர்ந்து  திருட்டுப்பயலே, திருட்டுப்பயலே 2, கந்தசாமி போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.

திருட்டு பயலே படத்தை இவர் ஹிந்தியில் ரீமேக் செய்த நிலையில், அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால், தற்போது Dil Hai Gray என்கிற பெயரில், திருட்டுப்பயலே 2 படத்தையும் ரீமேக் செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விரைவில் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.


இந்நிலையில் சுசி கணேசன் வீட்டில் ஏற்பட்டுள்ள மரணம், அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சுசி கணேசனின் மனைவி மஞ்சரியின் தந்தை சண்முகவேலு கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 


85 வயதாகும் இவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். இதனால் பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement