• Jan 07 2026

என்னடா இது, bully Gang-ற்கு வந்த சோதனை- பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ள் நிலையில் தற்போது தான் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

 அதுவும் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது ஆட்டத்தின் போக்கையே மாற்றி இருக்கிறது. அவரின் எவிக்‌ஷனுக்கு பின் இந்த வாரம் கேப்டனான மாயா, போட்டியாளர்களை அணிதிரட்டி சண்டை போட்டு வருகிறார்.


அதுவும் குறிப்பாக ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் ஆகியோர் தான் இவர்களின் டார்கெட் ஆக உள்ளனர். மக்கள் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக நினைத்து மாயா கேங் ஆக சண்டை போட்டு வருவது அவர்களுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறப் போகின்றார் என்ற தகவல் வெளியாகியள்ளது. அதாவது மக்களின் வாக்குப்பட்டி அர்ச்சனா முதலிடத்திலும் அதனைத் தொடர்ந்து விசித்திரா இரண்டாம் இடத்திலும் தினேஷ் மற்றும் ப்ராவோ ஆகியோர் மூன்றாம் நான்காம் இடத்திலும் இருக்கின்றனர்.


ஆனால் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஷூ மற்றும் பூர்ணிமா ஆகியோரே இடம் பிடித்துள்ளனர். இதனால் இந்த வாரம் இவர்கள் இருவரில் யாரோ ஒருவர் தான் வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement