• Oct 13 2024

கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீர் தீ விபத்து..!! உயிர் தப்பிய சூப்பர் ஸ்டார்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் தான் ரஜினிகாந்த். 70வது வயதான இவருக்கு தற்போது மட்டும் மார்க்கெட் குறையாமல் காணப்படுகிறது. தொடர்ந்தும் ஹீரோவாக நடித்து வருகின்றார். இறுதியாக வேட்டையன் படத்தில் நடித்து  முடித்துள்ளார். இந்த படம் எதிர்வரும் அக்டோபர் மாதம் பத்தாம் தேதி வெளியாக உள்ளது.

இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகின்றார் ரஜினிகாந்த். இந்த படத்தில் சத்தியராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன் உட்பட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில், கூலிப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது விசாகப்பட்டினத்தில் கூலி படத்தின் ஷூட்டிங் நடைபெற்றத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


விசாகப்பட்டினம் கடற்கரையில் சூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது சீனாவில் இருந்து லித்தியம் பேட்டரிகளை ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு பெட்டக கப்பல் கொள்கலன் முனையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனாலும் இந்த தீ விபத்தில் இருந்து ரஜினிகாந்த்தும் படக்குழுவினரும் தப்பித்து விட்டதால் ரசிகர்கள் நிம்மதி அடைந்து உள்ளார்கள். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

Advertisement