• Jan 19 2025

திருமணம் பற்றி இப்படியொரு நேர அறிவிப்பா? KPY பாலா கொடுத்த ஷாக்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் மூலம் பிரபலமானவர் தான் KPY பாலா. இவர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றுள்ளார். தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அகவருடைய நகைச்சுவை திறமைகளை மக்கள் அறிய, பல போட்டிகள் கலந்து கொண்டு தற்போது மக்களின் செல்வனாக திகழ்ந்து வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அவருக்கு கிடைத்த செல்ல பெயர் தான் வெட்டுக்கிளி பாலா. அவர் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது அவருக்கு அமுதவாணன், வடிவேல் பாலாஜி, ராமர் போன்றவர்கள் மூத்த நகைச்சுவை நடிகர்களாக இருந்தார்கள். அதில் பாலாவுக்கு பக்க பலமாக  இருந்து இன்று ஒரு பெரிய நிலைமைக்கு கொண்டு வந்ததுக்கு  ஒரு முக்கிய காரணமாக காணப்படுகின்றார்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் பாலா வெற்றி பெற்றார். அதன் பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவரது கேரியரில் திருப்பு முனையாக  அமைந்தது. அதை தொடர்ந்து பல  ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கி வந்தார். எனினும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் மக்களின் மொத்த அன்பையும் பெற்றிருந்தார்.


இதை தொடர்ந்து அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் மூலம் கிடைக்கின்ற வருவாயை தனக்கு மட்டும் வைத்துக் கொள்ளாமல் பெரும் தொகையான பணத்தை மக்களுக்காகவே செலவு செய்தார். அவருடன் தற்போது நடிகர் லாரன்ஸ் மக்களுக்காக உதவி செய்வதில் பங்காற்றுகிறார்.

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களாலும் செய்ய முடியாத பல விஷயங்களை பாலா தனது வருமானத்தின் மூலம் செய்து வருகின்றார். இது திரையுலகினர் இடத்தே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, ஆட்டோ வாங்கி கொடுப்பது, பைக் வாங்கி கொடுப்பது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது பணியை விரிவாக்கி வருகிறார்.


இந்த நிலையில், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பாலாவின் திருமணம் பற்றி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த பேட்டியில் அவர் கூறும் போது,  இப்போதெல்லாம் மக்களுக்கு உதவி செய்யவே சம்பாதிக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. 

இதன் போது உங்களுடைய திருமணம் எப்போது கேட்க, அதற்கு திருமணமா சார்? காலை 04.30 மணியில் இருந்து 6 மணிக்குள் தேதி எப்பொழுது என பின்பு அறிவிக்கப்படும் என்று காமெடியாக சொல்லிவிட்டு சென்றுள்ளார் தற்போது அவர் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement