தமிழ் நடிகரும் இசையமைப்பாளராகவும் விளங்குபவரே ஜி. வி. பிரகாஷ். இவர் வெயில் என்ற படத்துடன் திரை உலகில் நடிகராக திகழ்ந்தார். அதனை அடுத்து டார்லிங் மற்றும் பேச்சிலர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பாடகர் ஜி.வி.பிரகாஷ் நடிகர் தனுஷ் பற்றிய தனது அனுபவத்தை கூறிவருகின்றார். அதில் அவர் கூறுகையில், இதுவரைக்கும் நான் தான் கடின உழைப்பாளி என்று நினைத்திருந்தேன். ஆனால் தனுஷ் என்னை விட கடின உழைப்பாளி.
நாங்க இருவரும் சேரும் போது அதோட அவுட்புட் மிகவும் பெரிதாக இருக்கும் எனவும் ஜி. வி. பிரகாஷ் தெரிவித்தார். அத்துடன் நானும் தனுஷும் சேர்ந்து ஒரு நாளைக்கு 17 மணி நேரம் கடுமையாக உழைப்பதாகவும் கூறியுள்ளார்.
அது மட்டும் இல்லாது இதுவரைக்கும் நாங்கள் இருவரும் இணைந்து பிரமாண்டமான 10 படங்களை செய்துள்ளோம். அந்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி இருந்தது. இனியும் இரண்டு பேரும் இணைந்து 3 படங்கள் செய்யப்போவதாகவும் கூறியுள்ளார்.
Listen News!