இளையராஜாவின் இசைக்கு மயங்காத ஆட்களே இருக்க முடியாது. அவருடைய இசை இன்ப, துன்ப வேலைகளில் மட்டுமில்லாமல் காதல், கோபம் ,அழுகை போன்ற உணர்ச்சிப்பூர்வமான சமயங்களிலும் கூட இவருடைய பாடல்கள் மனதை தேற்றும் அளவிற்கு பலன் வாய்ந்ததாக காணப்படுகிறது.
இந்த நிலையில், உலகத்தில் எந்த ஒரு இசையமைப்பாளரும் செய்யாததை நான் செய்துள்ளேன்.. அதனால் எனக்கு கர்வம் அதிகமாக தான் இருக்க வேண்டும் என இளையராஜா வழங்கிய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
d_i_a
அதில் அவரிடம் ஒரு பாடல் தனி மனிதனுக்குள் என்ன செய்யும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்? என கேள்வி எழுப்ப., என்னென்ன செய்யணுமோ அதை செய்து கொண்டு இருக்கின்றதா? என சிரித்தபடி பதில் அளித்துள்ளார் இளைய ராஜா.
அதன் பின்பு பாடல் என்பது கலையின் வெளிபாடா? இல்லை அதற்கு அப்பாற்பட்டதா? என்று கேட்க, அது ஒரு அப்பார்ட்பட்ட சக்தி என்று தானே உணருகின்றீர்கள்.. அதுதான் உண்மை..
நான் ஹார்மோனியம் முன்பு ஏதோ வாசிக்கிறேன்.. அதுதான் உங்களை வந்து சேருகின்றது.. உதாரணமா ஒரு கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள சிசு அசைவில் இல்லாமல் இருந்தபோது என்னுடைய திருவாசகம் இசை அதுக்கு உயிரை கொடுத்துள்ளது. குழந்தையின் அசைவின்மையால் மருத்துவர்கள் ஆபரேஷன் செய்யும் முற்பட்ட வேலையிலும் எனக்கு திருவாசகம் கேட்க வேண்டும் என அந்த தாய் கேட்ட போது, அதனை பிளே செய்து உள்ளார்கள். அதில் குழந்தைக்கு உயிர் வந்துள்ளது.
அது போல மதம் பிடித்த நிலைமைக்குச் சென்ற யானைக்கு கூட மலையாளத்தில் நான் இசையமைத்த தாலாட்டு பாட்டு பாடிய பாகன் அந்த யானை தூங்கிவிட்டதாக பிரம்மித்தான்.. இது எப்படி சாத்தியம்.?
அதேபோல வைதேகி காத்திருந்தாள் படத்தில் ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு பாடலை கேட்க ஒரு யானை கூட்டமே தினசரி தியேட்டருக்கு வந்து சென்றுள்ளது. அது அந்த பாடலை கேட்டுவிட்டு மீண்டும் காட்டுக்குள் சென்றுள்ளது.
இது எந்த காம்போசருடைய வாழ்க்கையிலாவது நடந்துள்ளதா? ஆனால் எனக்கு நடந்துள்ளது. அது இசைக்கு அப்பாற்பட்ட சக்தி. இதைச் சொன்னால் எனக்கு கர்வம் ஜாஸ்தி என்று சொல்லுவார்கள்..
ஆனால் எனக்கு தான் கர்வம் வரணும்.. எனக்குத்தான் திமிரு ஜாஸ்தியா இருக்கணும்.. ஏனென்றால் இந்த உலகத்தில் யாரும் செய்யாததை நான் செய்துகிட்டு இருக்கேன்.. இதை நினைத்தால் எனக்கு திமிரு இல்லாமல் இருக்குமா?
நல்ல வேலையை செய்தால் தான் கர்வம் வரும்.. நீ ஒண்ணுமே செய்யாம இருந்துட்டு அவருக்கு மட்டும் கர்வம் இருக்குன்னு சொன்னா இருக்கத்தான் செய்யும்.. விஷயம் இருப்பவரிடம் கர்வம் இருக்காதா என இளையராஜா பேசி உள்ளார்..
Listen News!