தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் மிகவும் பிசியான நடிகராக காணப்படுகின்றார். இவர் நடிப்பில் இறுதியாக ராயன் திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் சுமார் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலில் இணைந்தது.
இதைத்தொடர்ந்து தெலுங்கு இயக்குனருடன் குபேரா படத்தில் நடித்து வருகின்றார். அதில் தனுஷின் தோற்றம் மிகவும் மாறுபட்ட வேடத்தில் காணப்படுகின்றது. மேலும் இந்த படத்தில் யாசகர் போல காணப்படுகின்றார். இதனால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவு காணப்படுகிறது.
d_i_a
இன்னொரு பக்கம் இட்லி கடை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய திரைப்படங்களையும் தானே இயக்கி நடித்து வருகின்றார். இதில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இந்த மாதமே ரிலீஸ் ஆக உள்ளது. அதில் அவருடைய அக்காவின் மகனான பவிஸ் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் 2026 ஆம் ஆண்டு தரமான இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன் மற்றும் நெல்சன் ஆகிய மூன்று இயக்குனர்களுடனும் சேர்ந்து பணியாற்ற உள்ளாராம்.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இடம் பிடித்து வருவதோடு அவர் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, ரஜினிகாந்த் ஆகியோரை வைத்து இயக்கிய படமும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இடம் பிடித்திருந்தன. தற்போது தனுசு உடன் எவ்வாறான படத்தை ரசிகர்களுக்கு கொடுக்க உள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!