• Jan 16 2026

கணவரை கண்டதும் எமோஷனலான ஸ்ருதிகா! பிக்பாஸ் பிரீஸ் டாஸ்க்கில் நடந்த சம்பவம்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 18ன் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலமான நடிகை ஸ்ருதிகா கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அதில் பிரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. ஸ்ருதிகாவை பார்க்க  அவரின் கணவர் அர்ஜுன் வந்துள்ளார். அப்போது நெகிழ்ச்சியான ஸ்ருதிகாவின் அழகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


நடிகை ஸ்ருதிகா ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 8ல் இவர் கலந்து கொள்ளுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் ஹிந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அருமையாக விளையாடி வருகிறார். 


இந்நிலையில் தற்போது ஹிந்தி பிக்பாஸில் Freeze Task நடந்து வருகிறது. அதில் ஸ்ருதிகாவை பார்ப்பதற்காக  தனது கணவர் அர்ஜுனை இந்தி பிக்பாஸ்ஸுக்கு சென்றுள்ளார். அர்ஜுனை பார்த்ததும் ஸ்ருதிகா ஓடிவந்து அவர் மீது குதித்து கட்டிப்பிடித்துக்கொண்டு அழுகிறார். அந்த அழகான எமோஷ்னல்  வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement