• Jan 21 2025

கடைக்கு ஓனராகும் அண்ணாமலை! விஜயாவால் ரோகிணிக்கு வரும் நெருக்கடி!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நிறைய டுவிஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் அடுத்த அதிரடியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


சிறகடிக்க ஆசை ப்ரோமோவில் முத்து "அவன் அந்த காசை திருப்பி தார வரைக்கும் அப்பா தான் இனிமே கடைக்கு ஓனர் இல்லனா அந்த கடையும் அவனை விட்டு போயிரும், அதுஅது இருக்க வேண்டிய ஆளுகிட்டத்தான் இருக்கணும்" என்று முத்து சொல்கிறார்.


இதனை கேட்டு மனோஜ் மற்றும் விஜயா அதிர்ச்சி ஆகிறார்கள். "முத்து சொல்லுவதை கொஞ்ச நாளைக்கு போலோ பண்ணுவது நல்லது என்று நினைக்கிறேன்" என்று சொல்கிறார் அண்ணாமலை.பின்னர் முத்து அண்ணாமலையை மனோஜின் ஷோரூமிட்கு அழைத்து சென்று "இனிமே இவர் தான் ஓனர் என்று மாலை போட்டு" கொண்டாடுகிறார்.


இதனை எல்லாம் பார்த்த விஜயா மனோஜ் மற்றும் ரோகிணியிடம் தனிமையில் பேசுகிறார். "அந்த பணத்தை கொடுக்குறவரைக்கும் இனி இப்படித்தான் நடக்கும் உங்க மாமா கிட்ட பேசி உங்க அப்பாகிட்ட பணத்தை வாங்கி அனுப்ப சொல்லு" என்று சொல்கிறார். இதனை கேட்டு ரோகிணி அதிர்ச்சியாகிவிடுகிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.

Advertisement

Advertisement