• May 17 2025

சிலருக்கு பணம் முக்கியம்…எனக்கு அன்புதான் தேவை..! திவி வாத்யாவின் உணர்வுபூர்வ பதிவு..!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

பிரபலமான தெலுங்குத் தொடரான "பிக் பாஸ்" நிகழ்ச்சியில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் தான் நடிகை திவி வாத்யா. அதனைத் தொடர்ந்து, "புஷ்பா 2", "டாக்கு மகாராஜ்" போன்ற படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் தனது அடையாளத்தை படிப்படியாக நிலைப்படுத்தி வருகின்றார்.


இந்நிலையில், திவி வாத்யா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான புகைப்படங்களுடன், வாழ்க்கை குறித்த தனது ஆழமான எண்ணங்களையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அதனை ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

தனது இன்ஸ்டா பதிவில் திவி கூறியதாவது,"மக்கள் எப்போதும் முழுமையாக திருப்தி அடையமாட்டார்கள். நமக்கு ஒரே ஒரு வாழ்க்கைதான் இருக்கிறது. பிரச்சனைகள் வந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், அவற்றை ஒரு சிட்டிகை உப்புபோல் எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும்." என்றார்.


மேலும், "சிலர் பணத்தை விரும்புகிறார்கள், சிலர் புகழைத் தேடுகிறார்கள், சிலர் நட்சத்திர அந்தஸ்தை துரத்துகிறார்கள். ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு, அன்புதான் தேவை. ஒவ்வொருவரும் தாங்கள் விரும்புவதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அதே சமயத்தில் அந்த பயணத்தில் மகிழ்ச்சியை காண மறக்கக்கூடாது" என உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்தத் தகவல்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement