தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இன்றைய தினம் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இவர்களுடைய திருமணம் சுமார் 8 மணி நேரம் நடைபெற உள்ளதாகவும் இதற்காக நாகார்ஜுனா 200 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த திருமணத்தில் பிரபல பாலிவூட் நடிகர்கள் முதல் அரசியல் தலைமைகளும் கலந்து கொள்ள உள்ளார்கள்.
நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யா ஏற்கனவே நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. நான்கு வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
இதைத் தொடர்ந்து நாக சைதன்யா சோபிதா மீது காதல் கொண்டார். இருவரும் வெளிநாடுகளில் டேட்டிங்கும் செய்து சுற்றி வந்தார்கள். அதன் பின்பு இவர்கள் இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கு இன்றைய தினம் திருமணம் நடைபெற உள்ளது. மேலும் இவர்கள் நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு திருமணம் செய்த கொள்ள உள்ளார்களாம். இதனை நாகார்ஜுனாவில் குடும்பம் மிகப்பெரிய சந்தோஷத்தோடு கொண்டாடி வருகின்றது.
இந்த நிலையில், சோபிதா துலிபாலாவின் தங்கை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் எமோஷனலாக போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். குறித்த பதிவில் 'அன்பான மனிதர் உங்களுக்கு எனது காதல் மட்டும் தான் அக்கா' என நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவின் புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் அவருடைய போஸ்டை பகிர்ந்து நாக சைதன்யா சோபிதாவின் திருமணத்திற்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!