பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராதிகா கோபியை பார்க்க ஹாஸ்பிடல் வந்ததும் அங்கு இருந்த ஈஸ்வரி அவரை பார்க்க விடாமல் தடுத்து நிறுத்துகின்றார். எழில், பாக்கியா ராதிகாவுக்கு சப்போட்டாக பேசவும், ஈஸ்வரி பிடித்த பிடிவாதமாக இருக்கின்றார்.
இதனால் ஒரு மாதிரி ஈஸ்வரியை சமாதானப்படுத்தி அவரை சாப்பிட அழைத்துச் செல்ல, கோபியை பார்ப்பதற்காக ராதிகா உள்ளே செல்கிறார். இதன்போது கோபியின் கைகளை பிடித்து ராதிகா பேச, அவர் பாக்கியா என நினைத்து ராதிகாவுடன் பேசுகின்றார்.
அதன்படி நான் உனக்கு எவ்வளவோ கெடுதல் பண்ணி இருக்கேன் ஆனா நீ தான் என்ன காப்பாற்றி இருக்கிறாய் என்று பாக்யாவை நினைத்து உருகுகின்றார் கோபி. இதை கேட்டு ராதிகா அதிர்ச்சி அடைகின்றார். அந்த நேரத்தில் ஈஸ்வரி வந்து ராதிகாவை வெளியே இழுத்துச் சென்று போகுமாறு விரட்டுகின்றார்.
அங்கு வந்த செழியனும் ராதிகாவை போகுமாறு சொல்லுகின்றார். ஆனால் எழில் ராதிகாவுக்கு சப்போட்டா பேசுகின்றார். இதனால் ராதிகா தான் போறேன் என்று செல்லுகின்றார். வெளியில் பாக்யா நிற்க அவருடன் அமர்ந்து பேச செல்லுகின்றார்.
இதன் போது தான் சந்தோஷமாகவே இல்லை. கோபி நீங்க என்று நினைத்து என்னுடன் பேசுகின்றார்.. அவருடைய குடும்பத்தை பேஸ் பண்ணியே என்னுடைய வாழ்க்கையை போகுது. நான் இந்த கல்யாணத்தை பண்ணி இருக்கக் கூடாது என்று புலம்புகின்றார். இதனால் பாக்கியா அவருக்கு இன்னும் நினைவு சரியாகவில்லை என்று சொல்லி ஆறுதல் சொல்லுகின்றார்.
இறுதியாக பாக்யா வீட்டில் இருக்க, அங்கு வந்த ஈஸ்வரி எதற்காக ஹாஸ்பிடல் வரவில்லை. உனக்கு கொஞ்சமும் மனது உறுத்தவில்லையா என்று கேட்க, பாக்கியா நான் என்ன அவருடைய பொண்டாட்டியா என்று கேட்டு பதில் அளிக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!