• Sep 30 2023

So Cute...மேக்கப் இல்லாமல் கேஸுவல் லுக்கில் அசத்தும் சீரியல் நடிகை நக்ஷத்ரா..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

வானவில், சன் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் நடிகை நக்ஷத்ரா நாகேஷ். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர்ஸ், மின்னலே, நாயகி என தொடர்ந்து தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் சில தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும். குறும்படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.


நடிகை நக்ஷத்ரா சீரியல்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சேட்டை, வாயை மூடி பேசவும், புலிவால், இரும்பு குதிரை, நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.


தற்போது ஹே சினாமிகா, வஞ்சகன், வணிகன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நக்ஷத்ரா கடந்த சில ஆண்டுகளாக ராகவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமே உண்டு.


சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ்-ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.அந்தவகையில் தற்போது மேக்கப் இல்லாமல் கேஸுவல் லுக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement