உலகின் இளம் சாம்பியன் குகேஷை பாராட்டி பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் பெறுமதியான பரிசை வழங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வலம் வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் உலகின் இளம் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் என்பவரை சமீபத்தில் தனது அலுவலகத்தில் சந்தித்துள்ளார். தனது பாராட்டுக்களை தெரிவித்த சிவகார்த்திகேயன் மேலும் அவருக்கு காஸ்ட்லி வாட்ச் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார். தொடர்ந்து குகேஷின் வெற்றியை அவருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குகேஷ் சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இவருக்கு பலரும் வாழ்த்து கூறி வந்தநிலையில் இவரின் சாதனையை பாராட்டி சிவகார்த்திகேயன் இவ்வாறு செய்தது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Listen News!