• Jan 18 2025

"வீர தீர சூரன்" படத்தினை பற்றி எஸ்.ஜே.சூர்யா சொன்ன தகவல்.

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

சியான் 62 எனும் தற்காலிக தலைப்பில் அறிவிக்கப்பட்ட விக்ரமின் 62 வது படமான வீர தீர சூரன் படத்தை எச்ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார்.எஸ்.யு.அருண் குமார் எழுதி இயக்கும் இப் படத்தில் விக்ரமை புது பரிமாணத்தில் காணலாம் என சொல்லப்பட்டிருந்தது.

Veera Dheera Sooran - Title Teaser | Chiyaan Vikram | S.U. Arunkumar | G.V.  Prakash Kumar

இப்படத்தில் விக்ரமுடன் துஷாரா விஜயன்,எஸ்.ஜே.சூர்யா,சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சித்திக் ஆகியோர் நடித்து வருகின்றனர்.படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமான நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் செய்தி ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.


அதாவது அண்மையில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா வீர தீர சூரன் படத்தை பற்றிய கேள்விக்கு "நேற்று தான் சியான் விக்ரமுடன் உடன் நடித்துவிட்டு வந்தேன் அது ஓர் அருமையான அனுபவமாக இருந்தது" என குறிப்பிட்டிருந்தார்.இச் செய்தியை கேட்ட ரசிகர்கள் இரு நடிப்பு அரக்கர்கள் இணைந்துள்ளனர் என புகழ்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement