தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாவது வருடமும் மாணவர்களுக்கு கல்வி விருது விழா வழங்கும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்து இருந்தார் விஜய்.
குறித்த விழாவில் நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது. ஆதலால் நீட் தேர்வு தேவை இல்லை என அதிரடியாக பேசி இருந்தார் விஜய். இந்த பேச்சுக்கு பல விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக சினிமா விமர்சகரான அந்தணன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் . அதன்படி அவர் கூறுகையில், நீட் தேர்வு பற்றி விஜய் பேசியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் திமுகவின் செயலுக்கு திடீரென ஆதரவு தெரிவித்து இருப்பது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
இன்னும் சிலர் அவர் திமுகவில் கூட்டணி வைத்துக்கொள்ள போகின்றாரா என்று கேள்வியும் எழுப்பி வருகின்றார்கள். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை. விஜய் நீட் குறித்து பேசியதும், ஒன்றியம் என்றதும் பாஜகவினரை காயப்படுத்தியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதனால் பாஜகவின் ஆதரவாளர்கள் பல செய்திகளை இணையத்தில் பரப்பி வருகின்றார்கள்.
அதில் ஒன்றுதான் விஜயின் நீலாங்கரையில் உள்ள வீட்டை இடிப்பதாக கூறியது. குறித்த வீடு கடல் மட்டத்தில் இருந்து சில மீட்டர்கள் அருகில் இருப்பதனால் அந்த வீட்டை சட்டபூர்வமாக இடிக்கும் நடவடிக்கை வரும் என்றும், திமுக விஜயின் வீட்டை இடித்து விடுவோம் என்று சொன்னதால்தான் அவர் தமிழக சட்டமன்றத்தில் நீட்டுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து பேசுவதாகவும் கருத்துக்கள் பரவி வருகின்றன.
இப்படி செய்தி பரப்புபவர்கள் விஜய்யின் நீலாங்கரை வீட்டை சென்று பார்த்தார்களா என்று தெரியவில்லை. அதற்கு காரணம் விஜய் கட்டியிருக்கும் வீட்டுக்கு அருகிலேயே பல பங்களாக்கள் இருக்கின்றன. அப்படிப் பார்த்தாலும் விஜய்யின் வீடு கொஞ்சம் தள்ளித்தான் இருக்கின்றது.
விஜய் இருக்கும் வீட்டிற்கு அருகிலேயே தான் பாரதிராஜாவின் வீடு உள்ளது. முதல்வரின் மருமகன் வீடும் உள்ளது. அப்படி விஜய் கட்டிய வீட்டை மட்டும் இடித்தால் நாளைக்கு பிரச்சனை வராதா? மக்கள் கேள்வி கேட்க மாட்டார்களா? இப்படி இருக்கும் போது எதையாவது வதந்தி கிளப்பி விட வேண்டும் என்பது சரியா? இந்த சர்ச்சைக்கு காரணம் விஜய் பாவித்த அந்த ஒன்றியம் என்ற வார்த்தை பாஜகவினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது தான்.
அத்துடன் விஜய்க்கும் விஜய் கட்சிக்கும் மிரட்டலை விடுத்திருக்கின்றார்கள். இதை பார்க்கும் போது நகைச்சுவையாக தான் இருக்கின்றது. ஆனால் நீட் குறித்து விஜய் பேசிய அரசியல் சிலரை குழப்பம் அடைய செய்துள்ளது என்று அந்தணன் கூறியுள்ளார்.
Listen News!