கிருத்திகா உதயநிதியின் ஒரு கேள்வி தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவ்வப்போது தனது வித்தியாசமான சிந்தனைகள், கருத்துக்கள் மற்றும் சமூகத்தை சார்ந்த பதிவுகளை தனது X தள பக்கத்தில் பகிர்ந்து வரும் அவர், தற்போது பதிவிட்டுள்ள ஒரு கேள்வி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அவர் தனது X பக்கத்தில், “இந்த பூமியில் இருந்து வெளியேறி வேற்று கிரகத்துக்கு செல்ல என்ன வழி?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். கிருத்திகா உதயநிதியின் இந்த பதிவு வெளியான சிறிது நேரத்திலேயே இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் தனது மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படையாக பகிர்ந்து வரும் கிருத்திகா உதயநிதி, திடீரென இப்படி ஒரு கேள்வியை எழுப்பியிருப்பது ஏன் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அவரது இந்த பதிவு வெறும் தனிப்பட்ட எண்ணத்தின் வெளிப்பாடா அல்லது ஏதேனும் புதிய திரைப்படம் அல்லது வெப் சீரிஸுக்கான ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக இருக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அதேபோல், தற்போதைய சமூக சூழல் அல்லது அன்றாட வாழ்க்கை குறித்த விரக்தியால் இப்படியொரு பதிவை அவர் பதிவிட்டாரா என்றும் சிலர் விவாதித்து வருகின்றனர்.
இதற்கான காரணம் குறித்து கிருத்திகா உதயநிதி இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனால் அவரது இந்த பதிவின் பின்னணி என்ன என்பது தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Listen News!