• Oct 09 2026

நிவின் பாலி கேரியரில் இப்படியொரு சாதனையா? கோடிக்கணக்கான வசூலைக் குவித்த ‘BKU'’

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நிவின் பாலி – மமிதா பைஜூ கூட்டணியில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளது.

இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் உருவான இப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாகவும், மமிதா பைஜூ கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி மலையாளத்தில் வெளியான இப்படம், வித்தியாசமான காதல் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கதாநாயகனை விட சுமார் 10 வயது குறைவான கதாநாயகிக்கு இடையேயான காதலை மையமாகக் கொண்டிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.


படம் வெளியான முதல் நாளிலிருந்தே கேரளாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் கூட்டம் காரணமாக வசூலும் நாளுக்கு நாள் உயர்ந்து வந்துள்ளது.

இந்நிலையில், ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் கேரள மாநிலத்தில் அதிக வசூலைக் குவித்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி 24 நாட்களில் கேரளாவில் மட்டும் ரூ.135 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், உலகளவில் இப்படத்தின் வசூல் ரூ.300 கோடியை கடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் இப்படம், நிவின் பாலியின் கேரியரில் முக்கியமான வெற்றிப்படமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement