• Oct 09 2026

‘மண்டாடி’ வசூலில் திடீர் திருப்பம்.! 4 நாட்களில் தலைகீழாக மாறிய பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

சூரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன.

வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மதிமாறன் புகழேந்தி இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘செல்ஃபி’ படத்தை இயக்கியிருந்த நிலையில், தற்போது சூரியை கதாநாயகனாக வைத்து ‘மண்டாடி’ படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தில் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், மிதுன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து ஆதரவு கிடைத்து வருகிறது. குறிப்பாக, படத்தின் கதை, சூரியின் நடிப்பு மற்றும் சுஹாஸின் கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘மண்டாடி’ திரைப்படத்தின் நான்காவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நான்காவது நாளில் மட்டும் இப்படம் ரூ.13.05 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் நான்கு நாட்களில் இப்படத்தின் மொத்த வசூல் ரூ.34.60 கோடியை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் ரூ.75 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம், இதே வேகத்தில் வசூல் செய்தால் விரைவில் பட்ஜெட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரூ.100 கோடி வசூலை நோக்கியும் ‘மண்டாடி’ பயணிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், படக்குழு உற்சாகத்தில் உள்ளது.

Advertisement

Advertisement