நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படம் வரலாற்று கதை அம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது. இதனை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். மேலும் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளார்கள்.
கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் பட குழுவினர் மட்டுமின்றி சூர்யாவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு உள்ளார்கள்.
இந்த நிலையில் கங்குவா திரைப்படத்தின் இசை வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவக்குமார் மேடையில் பேசும்போது, சூர்யாவுக்கு கல்லூரியில் சேர்த்து தர மறுத்த கதையையும் சூர்யா நான்கு அரியர் வைத்து படித்த கதையை பற்றி பேசி உள்ளார். சிவக்குமார் பேச பேச சூர்யா தலையில் கையை வைத்துக்கொண்டு குனிந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதன்படி அவர் கூறுகையில், சூர்யாவுக்கு லயோலோ கல்லூரியில் பி.காம் படிக்க விண்ணப்பம் கேட்டபொது இடம் இல்லை என்று சொன்னார்கள். அதன் பிறகு பிரின்ஸ்பலை பார்த்து என்ன பிரச்சனை என்று கேட்க, சிவாஜி கணேசன் பையன் பி.காம் முடிக்காக பாதையிலே போயிட்டாரு. இன்னும் இரண்டு மூன்று பிரபலங்களின் மகன்கள் அதேபோல படிப்பைப் பாதையிலே விட்டுச் சென்றார்கள். உங்கள் பையனும் அதே போலத்தான் செல்வார் எனக் கூறினார்.
ஆனாலும் நான் இல்லை எனது பையன் நிச்சயம் பி.காம் முடிப்பான் என்று சொல்லி சீட்டு வாங்கி கொடுத்தேன். ஆனா கடைசி வருஷத்துல நான்கு அரியர் வச்சி இருந்தான். என் மானத்த வாங்கிடாதே என்று சொன்னேன். கடைசில ஒருவழியா படிச்சு பிகாம் டிகிரி வாங்கிட்டான் என்று சிவக்குமார் மேடையில் பேசியுள்ளார்.
Listen News!