• Oct 12 2025

AI தொழில்நுட்பத்தில் தந்தையுடன் சிவகேத்திகேயன்...!இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படம்...!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் ரசிகர்களின் மனங்களை தொட்டுள்ளார். சிறுவயதில் தந்தையை இழந்த நடிகர், AI தொழில்நுட்பத்தின் மூலம் தனது தந்தையுடன் இருப்பதுபோன்ற ஒரு புகைப்படத்தை உருவாக்கி, தனது ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.


இப்புகைப்படத்தில், சிவகார்த்திகேயனும், அவரது தந்தையுமாக இருவரும் புன்னகையுடன் கையோடு கையிட்டு நிற்கும் வகையில் உள்ளதை காணலாம். “எப்போதும் என் அருகில் இருக்குற மாதிரி தான்…” என்ற செய்தியையும் அவர் அந்த ஸ்டோரியில் இணைத்திருந்தது ரசிகர்களை பெரிதும் உருக வைத்துள்ளது.


AI தொழில்நுட்பம் வளர்ந்துவரும் நிலையில், இவ்வாறு கடந்த கால நினைவுகளை உயிர்ப்பிக்கும் வகையில் பலரும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில், தனது தந்தையுடன் இருந்திருப்பதுபோல் ஒரு நினைவுபொருள் உருவாக்கிய சிவகார்த்திகேயன், தனது உணர்வுகளை வெளிப்படுத்திய விதம், பலரையும் நெகிழச் செய்துள்ளது.

இது போன்ற உணர்ச்சிப் புகைப்படங்கள், தொழில்நுட்பம் எவ்வாறு மனித உணர்வுகளோடு இணைந்திருக்க முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். ரசிகர்கள் பலரும் இந்த ஸ்டோரிக்கு மனதார பதிலளித்து, நடிகருக்கு உற்சாகமும் ஆதரவுமளித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement