• Sep 09 2024

சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் சிவகார்திகேயனின் பேச்சு !

Thisnugan / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு போட்டியாளராக நமகெல்லாம் பரிச்சயமாகி அதே நிகழ்ச்சியின் தொகுப்பாளர் தொடர்ந்து நடன நிகழ்ச்சியின் போட்டியாளர் என தன்னை வளர்ந்துகொண்டே வந்த சிவகார்த்திகேயன்  "3" படத்தில்  தனுஷின் நண்பனாக நடித்திருப்பார்.

Pin page

தொடர்ந்து சிவகார்த்தியேனனின் திறமையை உணர்ந்த தனுஷ் எதிர்நீச்சல் எனும் படத்தினை தயாரித்து சிவகார்த்திகயேனை ஹீரோவாக்கினார்.தொடர்ந்து தனது திறமை மற்றும் உழைப்பாலும் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் இளவரசன் எனச் சொல்லப்படுமளவு உயர்ந்து நிக்கிறார்.

Sivakarthikeyan - Wikipedia

நடிகரில் இருந்து தயாரிப்பாளராக உயர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன் தற்போது சூரி நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைபடத்தை தயாரித்துள்ளார்.இன்றைய தினம் இடம்பெற்ற  "கொட்டுக்காளி" திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் தனது பேச்சு நிறைவில் தனுஷை தாக்கி பேசியதாக குறிப்பிட்டு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


"தயாரிப்பாளராக தான் எவரையும் கண்டு பிடித்து அவர்களுக்கு வாழ்க்கை கொடுக்கவில்லை அப்படி நான் எப்போதும் கூற மாட்டேன் ஏனெனில் என்னை சொல்லி பழக்கிவிட்டனர் தான் தான் வாழ்கை கொடுத்தாக" என்று சிரித்தவாறே கூறியிருந்தார் மேலும் இது ஓர் நண்பரை அறிமுகம் செய்வது போலத்தான் அதுவும் மக்களாகிய நீங்கள் கொடுத்த நடிகன் எனும் பதவியில் இருந்து அறிமுகம் செய்வதாக கூறியிருந்தார்.


Advertisement

Advertisement