தமிழ் சினிமாவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயனின் "அயலான்" திரைப்படம் திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவின் பரந்த சாம்ராஜ்யத்தில், “அயலான்” ஒரு பிரபஞ்ச வெற்றியாக வெளிப்படுகிறது, இது சிவகார்த்திகேயனின் வெற்றிக்கு ஒரு திருப்பு முனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.
இந்த நிலையில், பொங்கல் தினத்தன்று வெளியான அயலான் படத்தின், வசூல் விபரம் பற்றி பார்ப்போம்.
அதன்படி, அயலான், கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், கேப்டன் மில்லர் வசூலில் சரிந்துள்ளது.
மேலும், கேப்டன் மில்லர் முதல் நாளில் 8 கோடி ரூபாய் வரை வசூல் செய்த நிலையில், சிவகார்த்திகேயனின் அயலான் படம் 4 கோடி தான் கலெக்ஷன் செய்தது.
இவ்வாறான நிலையில், 9வது நாள் நிலவரப்படி பார்த்தால், அயலான் நேற்று 2.5 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளது. அதேநேரம் தனுஷின் கேப்டன் மில்லர் 1 கோடி மட்டுமே கலெக்ஷன் செய்துள்ளது.
ஒட்டுமொத்தமாக அயலான் இதுவரை 65 கோடிக்கு அதிகமாகவும், கேப்டன் மில்லர் 45 முதல் 50 கோடி வரையும் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Listen News!