• Jan 16 2026

சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்.. அயலான் audio launch...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி பல்வேறு சர்ச்சைகள் சமீபத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தி இருந்தன. குறிப்பாக இசையமைப்பார் இமான் கொடுத்த பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என கூறிய பிறகு சிவகார்த்திகேயன் மீது அதிகம் ட்ரோல்கள் வர தொடங்கியது.


ஆனால் சிவகார்திகேயன் தன்னை பற்றி வரும் விமர்சனங்களுக்கு எந்த பதிலும் தராமல் இருந்தார். இந்நிலையில் அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.


"என்னை சில பேர் சூப்பர் என சொல்வார்கள். சிலர் பேர் திட்டுவாங்க. நான் இதை எல்லாம் எடுத்துக்கொள்வதில்லை. என்னுடைய hatersகளை நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. புடிச்சவங்களுக்காக நான் எப்போதும் போல என் பாதையில் ஓடிக்கொண்டிருக்க போகிறேன்" என கூறி இருக்கிறார்.


மேலும் பொங்கல் பண்டிகைக்கு அயலான் ரிலீஸ் ஆகும் நிலையில், போட்டிக்கு ரிலீஸ் ஆகும் தனுஷின் கேப்டன் மில்லர், லால் சலாம் ஆகிய படங்களும் வெற்றி பெற அவர் வாழ்த்தி இருக்கிறார். 

Advertisement

Advertisement